×

முன்னால் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் ஜானி டெப் வெற்றி

வாஷிங்டன் : நடிகர் ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானார். இவர், ஒப்பனை கலைஞரான லோரி அனி அலிசன் என்ற பெண்ணை 1983- ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் இரண்டே ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.இதையடுத்து 2015-ம் ஆண்டு ஜானி டெப் தன்னை விட 25 வயது குறைவாக இருந்த நடிகை ஆம்பர் ஹேர்ட்டை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண உறவும் இரண்டே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து 2019-ம் ஆண்டு பிரபல அமெரிக்க பத்திரிக்கையான தி வாஷிங்டன் போஸ்ட்-ல் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.அந்த கட்டுரையில் தனது முன்னாள் கணவர் ஜானி டெப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தான் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் ஆம்பர் தெரிவித்திருந்தார். இந்த கட்டுரை வெளியான பின்னர் ஜானி டெப்பிற்கு பட வாய்ப்புகள் குறைந்தது. மேலும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார்.இதையடுத்து குடும்ப வன்முறை என தன் மீது ஆம்பர் தெரிவித்த குற்றசாட்டுகளை மறுத்த ஜானி டெப், தனது பெயர், புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும், அதற்க்கு இழப்பீடாக ரூ.380 கோடி நஷ்ட்ட ஈடு வழங்கக்கோரி ஆம்பர் மீது ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து இந்த வழக்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த நிலையில் இதன் இறுதிக்கட்ட விசாரணை கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று ஜானி டெப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.இதையடுத்து அவதூறு பரப்பும் வகையில் பொய்யான குற்றசாட்டுகளை முன் வைத்ததாக ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானி டெப்பிற்கு இழப்பீடாக மொத்தம் ரூ.116 கோடி வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜானி டெப்பிற்கு ஆதரவான தீர்ப்புகள் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார். …

The post முன்னால் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் ஜானி டெப் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Johnny Depp ,Washington ,Captain Jack Sparrow ,
× RELATED தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற...